“ஏ.ஆர்.ரஹ்மான் போல இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் இளையராஜா பதிப்புரிமை பெறவில்லை….” – எக்கோ நிறுவனம்

240 0

ஊதியம் அளித்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமையாளர் எனவும், அதனால், தயாரிப்பாளரிடம் ஒப்பந்த செய்து பாடல்களுக்கான உரிமையை பெற்றுள்ளதாகவும் எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் போல, தான் இசையமைத்த அனைத்து பாடல்களுக்குமான பதிப்புரிமையை இளையராஜா பெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இசையால் பல மாயாஜாலங்கள் செய்து இசைக்கு ராஜாவாக திகழ்ந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. சமீப காலமாக இவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அதற்க்கு முக்கிய காரணம், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த காப்புரிமை பெற வேண்டும் என்றும் அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வெளியிட்ட அறிக்கை தான்.மேலும், தனது பாடல்களை பயன்படுத்த தனக்கு காப்புரிமை தரவேண்டும் என்று எக்கோ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. அதற்க்கு, இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக,
உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஊதியம் அளித்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமையாளர் எனவும், அதனால், தயாரிப்பாளரிடம் ஒப்பந்த செய்து பாடல்களுக்கான உரிமையை பெற்றுள்ளதாகவும் எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் இளையராஜா, தார்மீக உரிமைகோர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டது.மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை எனவும், ஆனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் இளையராஜா எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை எனவும் எக்கோ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இதனால், இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது எனவும் வாதிட்டது.எக்கோ நிறுவனத்தின் வாதம் நிறைவடைந்ததால், இளையராஜா தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம்

Posted by - September 16, 2025 0
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.…

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Posted by - December 8, 2022 0
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா…

திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!

Posted by - July 10, 2024 0
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகதராஜா. விஷால் கதையின்…

ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

Posted by - December 14, 2023 0
ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *