தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

215 0

அ​தி​முக-வுடன் பியூஷ் கோயல் நடத்​திய பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, கசி​ய​விடப்​பட்ட தொகு​திப் பங்​கீடு குறித்த தகவல்​கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்​சிகளை தவெக பக்​கம் தடம் மாற வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

அதி​முக உடனான பியூஷ் கோயல் டீம் சந்​திப்​புக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், “தினகரன், ஓபிஎஸ்ஸை கூட்​ட​ணிக்​குள் சேர்ப்​பது குறித்​தான பேச்​சு​வார்த்​தைகள் எது​வும் இன்று நடக்​க​வில்​லை” என்று தெரி​வித்​தார். அதேசம​யம் தினகரன், பிரேமல​தா, ஓபிஎஸ் ஆகி​யோ​ருக்கு முறையே ஆறு, ஆறு, மூன்று என தொகு​தி​கள் ஒதுக்​கப்​படலாம் எனப் பேசப்​பட்​ட​தாக வெளி​யான செய்​தி​கள் அந்த மூவரை​யுமே கடும் கோபத்​திற்கு உள்​ளாக்​கி​விட்​டது.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் பேசிய தினகரன், “அம​முக-வுக்கு ஆறு இடங்​கள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் ஒதுக்​கப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான செய்​தி​கள் வதந்​தி. யாரை தோற்​கடிக்​கும் நோக்​கில் அமமுக உரு​வாக்​கப்​பட்​டதோ, அந்​தப் பாதை​யில் தொடர்ந்து பயணிப்​போம்” என்று சொன்​னார். அதே​போல், ஓபிஎஸ்​ஸின் ‘அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழக’ மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் பேசிய பலரும், “பழனி​சாமி தலை​மையை ஏற்​கவே முடி​யாது. 3 தொகு​தி​களுக்​காக அந்த அணிக்​குச் செல்​லக்​கூ​டாது” என்று வற்​புறுத்​திய நிலை​யில், ஓபிஎஸ்​ஸும் அதை வழிமொழிந்​தார். அதி​முக அணி இல்​லாத நிலை​யில் இவர்​கள் இரு​வ​ருக்​கும் இருக்​கும் அடுத்த சாய்​ஸ், திமுக அணி அல்​லது தவெக அணி தான்.

ஆரம்​பம் முதலே தவெக-வுக்கு ஆதர​வாகப் பேசி வரும் தினகரன், “தவெக தலை​மை​யில் தாங்​கள் கூட்​டணி அமைத்​தால், அதி​முக மூன்​றாவது இடத்​துக்கு தள்​ளப்​படும்” என்​றும் சொன்​னார். ஆனாலும் அமமுக விஷ​யத்​தில் எந்​தப் பிடி​மான​மும் கொடுக்​க​வில்லை தவெக. அதனால் மைய​மாகவே பேசிவந்த தினகரனுடன் தற்​போது தவெக தரப்​பிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தி வரு​வ​தாகத் தெரி​கிறது. இவரோடு சேர்ந்து ஓபிஎஸ்​ஸும் பனையூர் பக்​கம் போவதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் நிறையவே இருக்​கின்​றன. இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடப்​பது உண்மை என செங்​கோட்​டைய​னும் அதை உறு​திப்​படுத்தி இருக்​கி​றார்.

தினகரன், ஓபிஎஸ்​ஸைத் தொடர்ந்து பிரேமல​தா​வும் ஆறு சீட் விஷ​யத்​தில் தகிப்​புடன் இருக்​கி​றார். “எந்​தக் கட்சி இப்​படி​யான செய்​தியை பரப்​பியதோ அந்​தக் கட்​சிக்கே இது அழிவு காலத்தை உண்​டாக்​கும்” என்று சாபம் விட்​டிருக்​கி​றார். இப்​போதைக்கு அந்​தக் கட்சி திமுக, அதி​முக, தவெக என மூன்று கட்​சிக்​கும் வாசலைத் திறந்து வைத்​திருந்​தா​லும் கடைசி நேரத்​தில், கவுர​மான இடங்​களைப் பெறு​வதற்​காக தவெக பக்​கம் செல்​வதற்​கான வாய்ப்​பு​களே அதி​கம் இருப்​ப​தாகத் தெரி​கிறது.

ஆனாலும் திமுக-வை வீழ்த்த மெகா கூட்​டணி அமைக்​கப் போவ​தாகச் சொல்​லிக் கொண்டே வரும் பாஜக, இவர்​களை எல்​லாம் அவர்​கள் போக்​கிலேயே போக விட்​டு​விடுமா என்​பதை பொறுத்​திருந்து தான் பார்​க்க வேண்​டும்​.

Related Post

dmdk

’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’

Posted by - February 19, 2026 0
’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’ எந்த…

தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

Posted by - August 21, 2025 0
#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…
aiadmk eps

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

Posted by - April 23, 2026 0
மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி,…

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *