mks

’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!

132 0

ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல  ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா? திமுக கேள்வி

தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக அக்கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக பத்திர பதிவுத்துறை தலைவர் அண்மையில் கூறும்போது, ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்’’  என்று கூறி இருந்தார்.

தவெக ஆட்சியில் முதல்வர் விஜய் தலைமையில் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, முந்தையம்அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக திமுக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தி இருப்பதுபோல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.

கணினி மயமாக்கிய கலைஞர்

பத்திரப் பதிவுத் துறையை கணினி மயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

18 சேவைகளை உள்ளடக்கிய செயல் திட்டம்

இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல  ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?’’ என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Related Post

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

Posted by - March 4, 2024 0
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…
vijay cm tn

TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?

Posted by - May 10, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சபாநாயகர் பதவியை தவெக தங்கள் வசம் தக்கவைக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக…

கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது

Posted by - December 20, 2025 0
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *