திருப்பரங்குன்றம் தீபத்தூண்: உச்ச நீதிமன்றம் அனுமதி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதியில் வரும் கார்த்திகை தீபத்திருநாளில் மட்டும் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும் தர்கா நிர்வாகமும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் இறுதி கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த அனுமதி ஒருமுறை