காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டினர் வெளியேற காசா எல்லை திறக்கப்பட்டது

268 0

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. சில ஏவுகணைகள் தவறுதலாக குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து, வெடிகுண்டு தாக்குதலால் தீப்பிடித்து எரியும் கட்டடங்கள், முகாம் மீது தாக்குதல் போன்றவற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கடந்த 25 நாட்களாக தொய்வின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பலத்த காயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது. காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம் | Agreement reached to allow  foreigners to leave Gaza amid mass Palestinian evacuation from north

இரட்டை குடியுரிமை , வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும், போருக்கு மத்தியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

ஆனால், காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

Related Post

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை

Posted by - July 16, 2025 0
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார். ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

”மாட்டிக்கிட்ட” பொய்யா சொல்றியே பங்காளி..! பாக்., எப்படிலா உருட்டி இருக்கு பாரேன்..!

Posted by - April 25, 2025 0
பஹல்காம் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானை நம்ப முடியாததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் உலக நாடுகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது. ”நோ”…

பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதா..? இந்த விஷயங்களை தவிர்த்தால் சரியாயிடும்..!

Posted by - December 3, 2022 0
பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *