விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

265 0

விஜய்யின் கடைசி படம்

தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியுள்ள நிலையில், அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் துவங்கிய நேரத்தில் இருந்தே, இது தெலுங்கில் வெளிவந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என கூறப்பட்டது.

சமீபத்தில் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை, தளபதி 69ல் படமாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படம் ரீமேக்-ஆ இல்லையா என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், பகவந் கேசரி திரைப்படம் 5 முறை பார்த்தாராம். அதன்பின் அப்படத்தின் இயக்குநரான அனில் ரவிபுடி-யை அழைத்து தன்னுடைய கடைசி படமாக அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரீமேக் படத்தை இயக்க முடியாது என, விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்பின் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பதும் சரியில்லை. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. அப்படத்தை இயக்கமுடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அந்த நடந்தது வேறு, தளபதி 69க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என கூறினார்.

Related Post

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - மே 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…
சினிமா நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தோற்றம் குறித்த கருத்து

Posted by - நவம்பர் 22, 2026 0
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும் முத்திரை பதித்த முன்னணி நடிகையாவார். சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மற்றும்…

4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

Posted by - ஜூலை 3, 2023 0
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…
DC Movie Review

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - ஆகஸ்ட் 8, 2026 0
DC படம் தமிழ் சினிமாவில் மக்கள் கவனிக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் அவர் சினிமா அறிமுகமான முதல் படம், அதன்பின்…

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - மார்ச் 20, 2025 0
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன