அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

258 0

“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?” என்கிற கேள்வி இந்நேரம் உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது!நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் 5 அன்று இரண்டு கலர் (பிளாக் மற்றும் ஒயிட்) ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகமானது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் ப்ளூ கலர் ஆப்ஷன் அறிமுகமானது.

இதற்கிடையில் நத்திங் நிறுவனமானது மேலும் 2 புதிய கலர் ஆப்ஷன்களில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்பது போல் தெரிகிறது. எனவே நத்திங் போன் 2ஏ மீது உங்களுக்கு ஒரு கண் .இருந்தால்.. அவசரப்பட்டு இப்போதே அதை வாங்கினால், 3 கலர் ஆப்ஷன்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். மாறாக இன்னும் சில தினங்கள் காத்திருந்தால்.. 2 புதிய கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

நத்திங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்கள் மீது கடைபிடிக்கும் பாணியை அப்படியே காப்பி அடிப்பது போல தெரிகிறது. இவ்விரு புதிய கலர் ஆப்ஷன்களும் இந்தியாவில் கூடிய விரைவில் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறுபட்ட கலர்களை தவிர்த்து, அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது.

நத்திங் போன் 2ஏ-வின் டிசைன்: டிசைனை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஆனது அதன் பேக் பேனலில் கிடைமட்டமாக பேக் செய்யப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது. இரண்டுமே ஒரு சர்குலர் ஐலேண்ட் டிசைனிற்குள் உள்ளன. இதுதவிர்த்து பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) கொண்டுள்ளது.

நத்திங் போன் 2ஏ-வின் முக்கிய அம்சங்க: டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ்-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஓஎஸ் மற்றும் ஓஎஸ் அப்டேட்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான (அவுட் ஆஃப் தி பாக்ஸ்) நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 வருடங்களுக்கான மேஜர் ஓஎஸ் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் நத்திங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

நத்திங் போன் 2ஏ-வின் விலை நிர்ணயம்: பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Related Post

Generated Image November 22 2025 5 56PM

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

Posted by - December 9, 2022 0
நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு…

வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 8, 2023 0
ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள்…

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

Posted by - May 26, 2023 0
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும்…

தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

Posted by - April 28, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *