ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

259 0

மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும், இப்படத்தில் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 

அதிரடி பதில்

அதில், “மூக்குத்தி அம்மன் 2 அரண்மனை 4 போல் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்கள் அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு, அப்படியா! எனக்கே அது தெரியாது” என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.

Related Post

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

Posted by - அக்டோபர் 19, 2024 0
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான…

“ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் சூப்பர் புகைப்படங்கள்..”

Posted by - ஜூலை 15, 2023 0
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….…
588001113 1384978140306359 8738038138229268243 n

மிடில் கிளாஸ் (Middle Class) – குடும்பப் படம்!

Posted by - நவம்பர் 22, 2025 0
குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு நேர்த்தியான படைப்பு.​இன்று வெளியாகியிருக்கும் ‘மிடில் கிளாஸ்’, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு…

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

Posted by - நவம்பர் 29, 2022 0
நடிகை மீனா நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த…
தயாரிப்பாளர் V.ராஜா மகன் திருமண வரவேற்பு விழா நடைபெற்ற நட்சத்திர ஹோட்டல்

தயாரிப்பாளர் V.ராஜா மகன் திருமண வரவேற்பு

Posted by - நவம்பர் 21, 2026 0
தயாரிப்பாளர் V.ராஜா இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன