உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

222 0

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்.Ukraine crisis: Don't create panic, Zelensky tells West - BBC News கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை தானியங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளாக திகழ்கிறது. தற்போது ரஷியா கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை என்ன?. அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிராக வெறுப்பு கற்றுக் கொடுக்கப்படும். இது இனப்படுகொலை என்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

Related Post

விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்

Posted by - June 10, 2023 0
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது.…

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - April 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…

ஏர்செல் ஓனருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா? ரூ.40,000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு ***வியாக மாறிய கதை!

Posted by - August 25, 2023 0
உலக பணக்காரர்களில் முதன்மையான ஒருவரின் மகன் 40,000 கோடி சொத்துகளை வேண்டாம் என்று விலகி துறவியாகியுள்ளார். அவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் மாபெரும் பணக்காரர்கள்,…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

Posted by - December 10, 2024 0
குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய…
Generated Image January 01 2026 12 08PM

ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Posted by - January 1, 2026 0
உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *