உடலுக்கு ஆற்றல் தரும் புல்லட் புரூப் காபி

233 0

‘பட்டர் காபி’ என்று அழைக்கப்படும் ‘புல்லட் புரூப் காபி’, அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் எளிதாகக் கிடைக்கும்.What is bulletproof coffee? | BBC Good Food

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார். கீட்டோ உணவு முறை மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு புல்லட் புரூப் காபி.

இதில் முக்கிய மூலப் பொருளாக எம்.சி.டி (மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள்) எண்ணெய் எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புத் தொடர்கள் கொண்ட எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதை தேங்காய் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதில் 50 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் ‘புல்லட் புரூப் காபி’ செய்முறை இதோ…

தேவையான பொருட்கள்:

விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் – 1½ டீஸ்பூன்

சூடான தண்ணீர் – 1 கப்

எம்.டி.சி எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

பசு நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

சூடான தண்ணீரில் காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாகப் பருகலாம். புல்லட் ப்ரூப் காபியை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது.

இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.

குறிப்பு:

தண்ணீர் சூடாக இருப்பது அவசியம். அப்போதுதான் எண்ணெய் மற்றும் நெய் நன்றாக உருகி தண்ணீரில் கலக்கும்.

Related Post

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்..

Posted by - June 12, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது : மீறினால் உயிருக்கே ஆபத்தா..?

Posted by - March 6, 2023 0
யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். சிலருக்கு அசைவ உணவுதான் நிறைவைத் தரும்.…

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

சிங்கப்பெண்ணே சீரியலின் 20 டிசம்பர் 2025 ப்ரோமோ வெளியிடப்பட்டது!

Posted by - December 20, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாக வரும் பிரபல தமிழ் சீரியல் சிங்கப்பெண்ணே-இன் இன்றைய பர்ஸ்ட் லுக் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டது. Promo-வில் கதாபாத்திரங்கள் அன்பு, ஆனந்தி மற்றும் ரகு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *