Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.
முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கட்சி கொடி கட்டிய தனது பழைய காரில் புறப்பட்டு ஆளுநர் மாளிகை வருகை தந்தார். அவருடன் அவரது தாயார் துர்காவும் வந்தடைந்தார்.இந்த விழாவிற்கு 400 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, திமுக எம்.பி கனிமொழி, செந்தாமரை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
Related Post
அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…
ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம்…
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…
ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…
”கருணாநிதி காலத்து டெக்னிக், சோத்துல கல்லு” ஷூட்டிங் ஓவரா? ஸ்டாலினை நக்கலடித்த ஈபிஎஸ்
முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த கருணாநிதி காலத்து டெக்னிக்கை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
Categories
- Sports (85)
- TN Political Zone (337)
- Trending Tamil (708)
- Viral Social (12)
- அரசியல் (212)
- இந்தியா (476)
- உலகம் (174)
- சினிமா (825)
- தமிழ்நாடு (1,130)
Recent Posts
- TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ…

- CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு – சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

- ’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்

- ”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக – தவெக மீது அட்டாக்

- Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?

