ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

224 0

BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொருவரையும் வெளியில் அனுப்பிய பெருமை மாயாவை தான் சேரும். நன்றாக விளையாடியிருக்க வேண்டிய போட்டியாளர்கள் பலரையும் தன் கூட்டத்தில் ஒருவரை சேர்த்துக் கொண்டு, அவர்களின் மூளையை மழுங்க செய்து ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்.ஏதாவது ஒரு வாரம் மாயா எலிமினேட் ஆகி விடுவார் என ஆசைப்பட்ட பார்வையாளர்களுக்கு அவர் இரண்டாவது ரன்னர் ஆனதே மிகப்பெரிய ஏமாற்றம் தான். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மாயா ரெட் கார்டு பற்றி பேசுவார், பிரதீப் ஆண்டனியை நேரில் சந்திப்பார் என ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயா பிக் பாஸ் வீட்டில் நடந்ததற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டு இருக்கிறார்.அர்ச்சனா எதில் சிக்குவார் வெளியே தள்ளிவிடலாம் என்று மாயா ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனபோது மாயாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு, உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் வந்து உன்னை பார்ப்பேன் என ஒரு ட்வீட் செய்து இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் நட்பாக பழகியது போல் காட்டிக்கொண்ட மாயா, நேற்றைய ட்வீட் ஒன்றில், தன்னுடைய புள்ளி கேங் மொத்தத்தையும் டேக் செய்து நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன் என உலகநாயகன் கமலஹாசனின் கவிதையை வைத்து உருட்டி இருந்தார். ஆனால் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர் டேக் செய்த அத்தனை பேருமே அவருடைய திட்டத்திற்கு பலிக்கிடா ஆனவர்கள் தான் என.

அன்பு கட்டளை இட்ட மாயா

இந்த ட்வீட்டை தொடர்ந்து தன்னுடைய ஆஸ்தான ஸ்குவாடு உறுப்பினர்களுக்கு ஒரு ட்வீட் மூலம் அன்பு கட்டளை போட்டிருக்கிறார். அதில் நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி, எனக்காக வெளியில் இருந்து போராடி இருக்கிறீர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்களையும் மரணப்படுக்கையிலும் என்னால் மறக்க முடியாது, உங்களுக்காக மட்டும் தான் இனிமேல் வேலை செய்யப் போகிறேன்.

நீங்கள் என்னுடைய ரசிகராக இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள், மற்றவர்களையும் ரசிங்கள், ஆனால் வேறு ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களை வெறுக்காதீர்கள், வேண்டுமென்றால் அவர்களை காதலியுங்கள். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், போய் நம்ம வேலையை பார்க்கலாம் என சொல்லி இருக்கிறார். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் மாயா மக்களிடையே எந்த ஒரு வெறுப்பையும் சம்பாதித்து இருக்க வேண்டாம்.

Related Post

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும் போட்டி

Posted by - November 13, 2023 0
பிக் பாஸ் இதுவரை நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன்…

குழந்தையிலேயே ஏன் காது குத்துகிறார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..

Posted by - March 9, 2024 0
பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது…

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்

Posted by - April 21, 2023 0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *