கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

280 0

கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம் - ஐபிசி தமிழ்

காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது.

இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.

Related Post

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - February 20, 2023 0
சியோல்: உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின்…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

இது புதிய வைரஸா..? இதுவும் கொரோனா போன்றதா..? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

Posted by - January 7, 2025 0
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *