கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

108 0

மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக தேனி,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.10ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.11 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில்  இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இந்த நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை தமிழ்நாட்டில் சராசரியாக 227 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது சராசரி மழை இயல்பைவிட மூன்று சதவீதம் குறைவாகும். ஆனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அதிக அளவுக்கு மழை பெய்திருக்கிறது.கோயம்புத்தூரில் 47%, மயிலாடுதுறையில் 44%, நீலகிரியில் 21%, ராணிப்பேட்டையில் 32%, தென்காசியில் 77%, தேனியில் 25%, திருநெல்வேலியில் 31%, திருவள்ளூரில் 35%, வேலூரில் 17 சதவீதமும் மழை இயல்பை விட கூடுதலாக பெய்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு சில மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பதிவாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீதமும், தூத்துக்குடியில் 77%, திருச்சியில் 44%, திருப்பூரில் 62%, சேலத்தில் 21%, ராமநாதபுரத்தில் 39%, நாமக்கல் மாவட்டத்தில் 37%, நாகப்பட்டினத்தில் 33%, மதுரையில் 34%, கிருஷ்ணகிரியில் 29%, கரூரில் 57%, கன்னியாகுமரியில் 15%, காஞ்சிபுரத்தில் 10%, கள்ளக்குறிச்சியில் 32%, ஈரோட்டில் 31%, திண்டுக்கல்லில் 60%, தர்மபுரியில் 30%, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 சதவீதமும் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.

Related Post

ஜப்பானிய வாட்டர் தெரபி என்றால் என்ன? ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமாம்…!

Posted by - December 6, 2023 0
தினமும் காலையில் எழுந்தவுடன் பல கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஜப்பானிய நீர் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால்,…

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - August 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *