காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

201 0

Egg Chukka Recipe – மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை மசாலா, முட்டை தொக்கு, முட்டை வறுவல் என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் எப்போதாவது முட்டை கொண்டு சுக்கா செய்து சாப்பிட்டுள்ளீர்களா. இல்லையென்றால் இந்த ரெசிபி உங்களுக்காக தான்.

மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 5
  • பெரிய வெங்காயம் – 3
  • தக்காளி – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • கருப்பு மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
  • கடலை மாவு – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – சுவைக்கேற்ப

 

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, கடலை மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு கொள்ளவும்.

பிறகு இந்த முட்டை கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டிபன் பாக்ஸிலோ ஊற்றி கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரம் ஒன்றை வைத்து அதில் இந்த முட்டை பாக்ஸை வைத்து 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு : டூத்பிக் உதவியுடன் முட்டை முழுவதுமாக வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

வேகவைத்துள்ள முட்டையை சிறிய சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வத்தகக்கவும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது அதனுடன் வெட்டி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து அனைத்து முட்டைத் துண்டுகளும் மசாலாவுடன் சேரும் அளவிற்கு நன்கு கலந்து வதக்கவும்.

பிறகு அதில் காரத்திற்கு ஏற்ப கருப்பு மிளகு தூள் சேர்த்து சில நிமிடம் கிளறி இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அனைத்தையும் சில நிமிடங்கள் நன்றாக வதக்கி அடுப்பை அணைத்தால் சுவையான ‘முட்டை சுக்கா’ ரெடி..

 

Related Post

தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

Posted by - October 17, 2023 0
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…

கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

Posted by - March 16, 2023 0
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும்…

கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

Posted by - December 3, 2022 0
Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு…

லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

Posted by - June 17, 2025 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ்…

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *