குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

350 0

குமரவடிவேல் நடராஜன்

குமரவடிவேல் நடராஜன்

வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து வடிவேலு அவர்களுக்கு படிப்பின்மீது அதிக ஆர்வம் இருந்ததில்லை. அப்போதெல்லாம் நாடகங்களை பார்ப்பது, அவற்றில் நடிக்கவேண்டும் எனபதுதான் அவரின் விருப்பமாக இருந்தது. வடிவேலுவின் பேச்சுக்கு பலரும் அடிமையாம். அவர் பேச ஆரம்பித்தால் அவரை சுற்றி இருப்பவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்களாம். அப்படி வசீகரமான பேச்சுக்குரியவர்தான் வைகைப்புயல் வடிவேலு.

மிகப்பெரிய அடி

மிகப்பெரிய அடி

படிப்பின்மீது ஆர்வம் குறைவாக இருந்த வடிவேலு நடிக்கலாம் என முடிவு செய்தபோது தான் அவரின் வாழ்வில் மிகப்பெரிய அடி விழுந்தது. மிகவும் உடல்நிலை சரியில்லாமல், அவரின் தந்தை காலமானார். அதன் பின்னர், குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும் என அவரது நடிப்பு கனவை ஓரம்கட்டிவைத்தார். தந்தை பார்த்துவந்த கண்ணாடி வேலையை அவர் கையில் எடுத்து நடத்திவந்தார்.

சினிமாவில் என்ட்ரி

சினிமாவில் என்ட்ரி

என்னதான் கனவினை ஓரம்கட்டிவைத்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இயக்குனர் மற்றும் நடிகர் டி. ராஜேந்திரனின் ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் ஒரு ரோல் கிடைக்க அதை சிறப்பாக செய்தார். அதன் பின்னர் ஊருக்கு சென்ற வடிவேலுவுக்கு நடிகர் ராஜ்கிரண் மூலமாக மற்றோரு வாய்ப்பு கிடைத்தது. ராஜ்கிரண் மற்றும் வடிவேலு ஒரு ரயில் பயணத்தில் சந்த்தித்துக்கொண்டனர். அப்போது வடிவேலுவின் பேச்சும் உடல் மொழியும் பிடித்துப்போக அவரை ‘என் ராசாவின் மனசுல’ என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுத்தந்தார் ராஜ்கிரண். அதன் பின்னர், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோர் படங்களில் நடித்தார். அப்போதைய காமெடி ராஜாக்களான கௌண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு.

இவரோட ஸ்டைலே தனி

இவரோட ஸ்டைலே தனி

 

சலசலப்பு

சலசலப்பு

அவரின் பேச்சு பலருக்கும் பிடிக்கும் என நமக்கு தெரியும். அதை வைத்துதான் சில சலசலப்புகளுக்கு உண்டானார் வடிவேலு. சினிமாவில் ராஜ்ஜியம் செய்துவந்த வடிவேலு, அரசியலிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என முடிவெடுத்து அரசியல் காட்சியிலும் சேர்ந்தார். திமுகவில் இணைந்த வடிவேலு எதிர்க்கட்சிகளின் மீது கடுமையான வார்த்தைகளை கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பல பொது நிகழ்ச்சிகளில், இப்படியான பேச்சுக்களால் சினிமா அவரை ஓரம்கட்டியது.

மீம்ஸ் க்ரீயேட்டர்களின் தெய்வம்

மீம்ஸ் க்ரீயேட்டர்களின் தெய்வம்

என்னதான் அவரை சினிமாவிலிருந்து ஓரம்கட்டினாலும், மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு இவர் தான் குலதெய்வம். நெட்டிசன்கள் இவரை வைத்து பல்லாயிர கணக்கான மீம்ஸ்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவரை சில வருடங்களுக்கு பெரிய திரையில் பார்க்கவில்லை என்றாலும் தினசரி வாழ்வில் செல்போன் திரையில் பார்த்துவந்தோம். அவரின் ஒரு புகைப்படத்தை பார்த்தாலே அந்த சீனின் வசனம் நமக்கு நினைவிற்கு வந்துவிடும். ஒவ்வொரு விதமான மீமுக்கும் அவரின் ஒவ்வொரு சீன பொருத்தமாக இருக்கும். அந்த வகையில், மீம்ஸ் க்ரீயேட்டர்களின் தெய்வமாகவே வடிவேலு திகழ்ந்தார்.

கம்பேக்

கம்பேக்

சில வருடங்களுக்கு பிறகு தெனாலிராமன் படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார் வடிவேலு. இந்த படத்தில் அவர்தான் லீட் ரோல். முன்னதாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களிலும் அவர் லீட் ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் எலி படத்திலும் நடித்தார். நகைச்சுவை நடிகராக விஜயின் மெர்சல் படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் நடிகர் விஷாலின் கத்தி சண்டை படத்தில் நடித்தார். சில வருடங்களுக்கு பிறகு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். அவரின் திரைவாழ்வில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார் வடிவேலு. அதுவரை காமெடி ரோலில் மட்டுமே பார்த்துவந்த வகைபுயலின் மற்றோரு பரிணாமத்தை மாமன்னன் படத்தில் காணலாம். அவரின் முக்கியமான படம் என்றால் அது சந்திரமுகி படம் தான். அந்த வகையில், சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

வைகைபுயலின் பிறந்தநாள்

வைகைபுயலின் பிறந்தநாள்

பல வருட கடின உழைப்பினால் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. இவர் இல்லையென்றால் இவரின் இடத்தை எந்த ஒருவராலும் நிரப்பமுடியாத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு இணை அவரே என்னும் முத்திரையை பதித்திருக்கிறார் மீம்ஸ் க்ரீயேட்டர்களின் தெய்வமான வடிவேலு. அவரின் 63வது பிறந்த நாள் இன்று. சும்மாவே வடிவேலுவின் போட்டோ போட்ட மீம்ஸ்கள் வைரலாகும், இன்று அவரின் பிறந்தநாள்.. சும்மாவா இருக்கும்..

Related Post

யாருமே கண்டு கொள்ளாத வெங்கட் பிரபு.. சிதறு தேங்காய் போல் உடைந்த 60028 டீம்

Posted by - January 27, 2025 0
விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும்போது தினமும் சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே…

14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களில் மூன்றரை மடங்கு உயர்வு

Posted by - March 28, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில்…

சிறுசு முதல் பெருசு வரை..”ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!

Posted by - December 13, 2025 0
ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த்.  ரஜினிகாந்த் திரைவாழ்வில் தவிர்க்க…

இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை கிடைக்குமா..? இன்று தெரிந்துவிடும்..!

Posted by - January 30, 2023 0
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின்…

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *