சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க… சூப்பரா இருக்கும்…

307 0

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு வேர்க்கடலை மசாலா செய்யுங்கள்.

இந்த சுரைக்காய் வேர்க்கடலை மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் நன்றாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும். அதோடு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாகவும் இது செய்யக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் வேர்க்கடலை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் வேர்க்கடலை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க... சூப்பரா இருக்கும்...  | Sorakkai Verkadalai Masala Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* வேர்க்கடலை – 1/2 கப்

* பூண்டு – 6 பல்

பிற பொருட்கள்…

* சுரைக்காய் – 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கப்பட்டது)

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* உப்பு – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, பச்சை மிளகாயையும் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளறி, சுரைக்காயையும் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

* பிறகு 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வாணலியை மூடி, குறைவான தீயில் வைத்து, 10-12 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* சுரைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சுரைக்காய் வேர்க்கடலை மசாலா தயார்.

Related Post

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…
asdfghjm

கசிந்த தகவல் Bigg Boss Tamil 9 – வெற்றி பெற போவது இவர்தானா?….

Posted by - November 14, 2025 0
#BiggBossTamil9 #BiggBossTamil #BBTamil9 #பிக்பாஸ் #Kamrudin #KamrudinArmy #Soundariya  #VJVishal  #BB9TitleWinner #BB9Finalists #BiggBossTamil9 #Kamrudin #BBTamil9 #BB9TitleWinner #பிக்பாஸ்தமிழ்9 #BiggBossUpdates #Love#Photography#PhotoOfTheDay#InstaDaily#Fashion#TamilNadu #Tamil #Chennai #TrendingTamil…

அடிக்கடி டென்டல் செக்கப் பண்ண வேண்டியது அவசியம்.. ஏன் தெரியுமா..?

Posted by - November 16, 2023 0
பல் வலி அல்லது பிற பல் சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான அதே சமயம் வலி மிகுந்த மற்றும் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிரச்சனை. எனவே உங்களது…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

திருமணம் முடிந்து கவின் மனைவி செய்த வேலை, என்ன தெரியுமா

Posted by - August 24, 2023 0
கவின் – மோனிகா வளர்ந்து வெள்ளித்திரை கதாநாயகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது. கடந்த 20ஆம் தேதி தான் நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *