சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

295 0

இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசினார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர்  - ரோகித் சர்மா சாதனை

மிர்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 51 ரன்களை விளாசினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (553) அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Related Post

IPL Auction 2025: அஷ்வின், நூர் அகமதை வாங்கியது ஏன்? – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

Posted by - November 25, 2024 0
நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.…

ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..

Posted by - June 4, 2025 0
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…
Generated Image February 23 2026 10 20AM

முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

Posted by - February 23, 2026 0
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *