சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

254 0

முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார்.

அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த அணியின் கேப்டன் தோனி 2 ஆவது முறையாக சூசகமாக அறிவித்துள்ளார்.நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, , இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு (Farewell) பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி என கூறினார்.சில வாரங்களுக்கு முன்பு தோனி அளித்த பேட்டியில் ஓய்வு குறித்த அறிவிப்பை கூறி பயிற்சியாளர் மற்றும் சென்னை அணி நிர்வாகத்தை நெருக்கடிக்கு தள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓய்வு குறித்து 2 முறை மறைவாக தோனி அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சீசனின்போது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் தோனி அளித்திருந்தார்.ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி தடுமாறியதை தொடர்ந்து மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் தோனி.முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.இதனால் தோனி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்து விட்டு விடைபெறும் எண்ணம்தான் தோனிக்கு உள்ளது  என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

Related Post

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

இன்றும் மழை பெய்தால் என்னவாகும் ? யாருக்கு கிடைக்கும் கோப்பை?

Posted by - May 29, 2023 0
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால், சென்னை- குஜராத் இடையேயான இறுதிப் போட்டி, இன்றிரவு 7.30…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *