Generated Image November 04 2025 4 27PM

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

158 0

சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது.

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள், இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அடிக்கடி பாமக எம்எல்ஏ அருள் தொலைபேசி எண்ணுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுவதும், ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடுவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, ஏற்கனவே பாமக எம்எல்ஏ அருள், காவல் நிலையத்தில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனுவை அளித்துள்ளார் .இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள கட்சியின் நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, பாமக எம்எல்ஏ அருள் கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அருள் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அருள் உடன் சென்ற ஆதரவாளர்களும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள்ளே அமர்ந்திருந்த அருளை கட்சி நிர்வாகிகள் பாதுகாத்தனர். பின், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஒட்டம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் எஸ்பி அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்தார்.

Related Post

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

கட்சிக்கு செல்போன் செயலி.. வீடியோவில் வந்து கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

Posted by - March 8, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று மாலை அறிமுகப்படுத்தினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *