ஜனநாயகனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா விஜய்.? லோகேஷ் உடைத்த சீக்ரெட்

106 0

Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் லோகேஷின் லியோ படத்தில் விஜய் நடித்திருந்தார்.

இந்த படம் கைதி, விக்ரம் ஆகியவற்றை தொடர்ந்து எல்சியு கான்செப்டில் தான் வந்தது. இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷனில் இறங்கி இருக்கிறார்.

இதில் கலந்துகொண்ட பேசிய லோகேஷ் விஜய் அண்ணா இல்லாமல் எல்சியு முழுமை பெறாது என்று கூறியிருக்கிறார். அவர் மீண்டும் சினிமாவிற்குள் வருவாரா, இல்லையா என்பது விஜய் இடம் தான் கேட்க வேண்டும். மேலும் அவரின் எண்ணம் என்ன என்று தமக்கு தெரியும்.

விஜய்யின் சினிமா கேரியர் பற்றி பேசிய லோகேஷ்

ஆகையால் இதுகுறித்து பதில் சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே விஜய்யின் அரசியல் முடிவு குறித்து அவர் சினிமாவில் நடிப்பாரா என்பது தீர்மானிக்கப்படும். அதாவது விஜய் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிப்பது கடினம்.

ஒருவேளை அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை என்றால் மீண்டும் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் அட்லீயும் விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்க ஆர்வமாக இருக்கிறார்.பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அட்லீயும் அந்த படத்தை எடுப்பேன் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். ஆகையால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் விஜய்யின் முடிவு தெரிய வரும்.

Related Post

Generated Image January 20 2026 11 13AM

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ

Posted by - January 20, 2026 0
கருப்பு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா? – அசத்தல் அப்டேட்

Posted by - January 28, 2025 0
சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளார். அவர் மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

கோலிவுட் நடிகர்களில் அதிக லைக்குகள் பெற்ற இன்ஸ்டா போட்டோ – முதலிடத்தில் விஜய் – 2வது இடத்தில் யார் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
நடிகர் விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்ட போட்டோவானது இதுவரை 2.64 மில்லியன் லைக்குகளை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்ஸ்டாகிராமில்…

இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை

Posted by - August 14, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார். அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *