டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

220 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் அதிக அளவில் ஆசைப்படுவது முன்னணி ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்பதுதான். அதற்காகவே அவர்கள் முயற்சி செய்து டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருவார்கள். அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள். அப்படி நடித்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை குடும்பக் கதையை மையமாக வைத்து வெளிவந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்ய ராஜேஷ் நடித்திருப்பார். ஆனால் பொதுவாக இவர் ஹீரோயினாக நடித்து வருகிறவர். அப்படி இருக்கையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு இவர்களின் கதாபாத்திரத்தை பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே இவர்கள் அண்ணன் தங்கச்சி என்று நினைக்கும் படி இவர்கள் நடிப்பு இருக்கும். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு பிறகு இவருக்கு வெற்றி படமாக எதுவும் அமையவில்லை.

 

சரண்யா மோகன்: மோகன் ராஜா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக சரண்யா மோகன் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சில படங்களில் நடிகையாக நடித்தவர். ஆனால் இந்த படமே இவர் கடைசியாக நடித்த படமாக மாறிவிட்டது. பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

லட்சுமி மேனன்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வேதாளம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், லட்சுமி மேனன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் லட்சுமி மேனனின் நடிப்பு என்றே சொல்லலாம். ஆனால் இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இவர் காணாமல் போய்விட்டார்.

 

கீர்த்தி சுரேஷ்: இயக்குனர் சிவா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு குடும்பக் கதையாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்தனர். இதில் ரஜினிக்கு, கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இவர் ஹீரோயினாக முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினி படம் என்று சொன்னதும் உடனே யோசிக்காமல் தங்கையின் கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கினார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருடைய ஹீரோயின் என்ற மாஸ் குறைந்து விட்டது. இதனால் தமிழில் படம் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

ஜோதிகா: இயக்குனர் சகாப்தம் சரவணன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் சசிகுமார் தங்கையாக ஜோதிகா நடித்திருப்பார். இந்தப் படத்தில் இவர்களுடைய அண்ணன் தங்கை சென்டிமென்ட் பார்க்கும் பொழுது கிழக்கு சீமை படத்தில் விஜயகுமார், ராதிகாவை நமக்கு ஞாபகப்படுத்தும் அளவிற்கு இவர்கள் நடிப்பு எதார்த்தமாக இருந்திருக்கும்.

Related Post

பிக் பாஸ் 9ல் இந்த நடிகரின் மனைவி கலந்துகொள்கிறாரா? அப்போ செம Fun இருக்கு

Posted by - August 30, 2025 0
பிக் பாஸ் 9 செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே பிக் பாஸ் குறித்த பேச்சு எங்கு திரும்பினாலும் இருக்கும். எப்போது ஆரம்பம், யார்யாரெல்லாம் பங்குகொள்ள போகிறார்கள், அவர்களுடைய சம்பளம் என்ன என்பது…

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்..

Posted by - June 12, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி…

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தொடரை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம்! முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?

Posted by - March 8, 2025 0
சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம். எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *