திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

170 0

TN TRB Hall Ticket 2025

தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், டிஆர்பி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் அதை அக்டோபர் 9ஆம் தேதி வரை சரிசெய்யலாம் என்றுஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியான ஹால் டிக்கெட்

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025, நாள் 10.07.2025-ன் அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) 30.09.2025 அன்று வெளியிடப்பட்டது.

இதில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு” (Hall Ticket) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 07.10.2025 முதல் 09.10.2025 மாலை 05.00 மணிவரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவுலகத்தில் நேரிடையாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வை ஒத்திவைக்க வலுக்கும் கோரிக்கை!

தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறி, தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. எனினும் திட்டமிட்டபடி முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, குறைதீர்ப்பு மைய விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

Related Post

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

போராட்ட களத்தில் கலைஞரின் ”பராசக்தி” வசனம்.. தமிழக முதல்வரின் கவனத்தை பெற்ற போராட்டம் . … அடுத்தது என்ன?

Posted by - December 29, 2022 0
  ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி… ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்? பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள், பலர் இறந்தும் விட்டார்கள்……

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

திமுகாவின் நாடகங்களை தமிழக மக்கள் இனி நம்ப மாட்டார்கள் – அண்ணாமலை விமர்சனம்

Posted by - March 20, 2024 0
2021 தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறுவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *