Generated Image January 07 2026 11 02AM

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

222 0

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- கூட்டணி தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் திமுக– அதிமுக– தவெக– நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய காய் நகர்த்தி வருகின்றது. அதில் எதிர்கட்சியாக அதிமுக எப்படியாவது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டுமிட்டு திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய அதிமுக, அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நாளை மறுதினம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் அன்புமணி

அதே நேரம் பாமகவில் அன்புமணி தரப்பிலான அணி அதிமுகவுடன் கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது.  இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள பசுமைவழிச்சாலைக்கு சென்ற அன்புமணிக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளித்தார். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே ஓப்பந்தம் ஏற்பட்டது.  அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டி போட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அடுத்தாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்தித்தார். அப்போது பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி இணைந்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். எனவே அன்புமணி  பாமகவிற்கு குறைந்தது 25 தொகுதிகளை ஒதுக்கும் படி கேட்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி கூட்டணி உறுதியானதை தெரிவித்தனர். மேலும் பாமகவிற்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Post

ASDFGH

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - மார்ச் 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…
image 1

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - நவம்பர் 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…
Generated Image January 19 2026 11 05AM

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - ஜனவரி 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - செப்டம்பர் 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!

Posted by - ஜூலை 31, 2025 0
’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன