திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? – விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

161 0

சினிமாவில் கால் வைப்பது வேறு அரசியல் களத்தில் கால் வைப்பது வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பல அரசியல் நிகழ்வுகளை பேசி அதிரடி காட்டினார் விஜய். அதாவது, “200 தொகுதிகளை இறுமாப்புடன் வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சியால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என பல்வேறு விஷயங்களை பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸும் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை. சினிமாவில் வேண்டுமென்றால் பிளஸ் மைனஸ் ஆகும்.

நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறது. வாரிசு என உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லிஅ.

விஜய் சேற்றில் காலை வைத்தால்தான் தெரியும். சினிமாவில் காலை வைப்பது வேறு. சேற்றில் காலை வைப்பது வேறு. மழை, வெள்ள நிவாரணப்பணிகளில் சேற்றில் வெள்ளத்தோடு வெள்ளமாக நின்று பணியாற்றி வருகிறோம்.

இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் திருமாவளவனுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக் கூடியவர் திருமாவளவன். வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அதுகுறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்.எல்.ஏவோ தலையிடவில்லை” எனத் தெரிவித்தார்.

Related Post

’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்

Posted by - March 18, 2025 0
செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிணைந்து அனைவரும் திமுகவை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. என்னதான் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் என் விஸ்வாசம் அதிமுகவுக்கு…
vijay 2

ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?

Posted by - March 16, 2026 0
தவெகவினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும், வீதி வீதியாகவும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அக்கட்சி தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.…

“பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றி” – ஈரோடு இடைத்தேர்தல்.. த.வெ.க வெளியிட்ட அறிவிப்பு!

Posted by - January 17, 2025 0
திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

விஜய் கட்சியில் அதிரடி: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றம்..!

Posted by - February 10, 2024 0
TVK Vijay | நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அண்மையில், நடிகர் விஜய்…
stalin

“தூய சக்தியா… அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ‘தூக்கும்’ சக்தியா?” – தவெக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted by - May 13, 2026 0
“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது” என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *