மனிஷா கொய்ராலாவின் கேரியரை முடிச்சுவிட்ட ரஜினி – அவங்கள இப்படி புலம்ப வச்சுட்டீங்களே.?!

178 0

ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நட்த்திரங்களுடன் நடித்து வந்த மனிஷா கொய்ராலாவின் தென்னிந்திய கேரியர் சரிந்ததற்கு ரஜினிதான் காரணமாக இருந்திருக்கிறார். இத அவங்களே தான் சொல்லியிருக்காங்க.

90 காலகட்டங்களில், இந்திய அளவில் பிரபலமாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. பாலிவுட்டில் அறிமுகமான இவர், தமிழ் திரையுலகிலும் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இவர், தென்னிந்தியாவில் தனது மார்கெட் சரிய இந்த படம்தான் காரணம் என ஓபனாக கூறியுள்ளார். அது எந்த படம், அவரது தென்னிந்திய திரை வாழ்க்கையை முடித்த அந்த ஹீரோ யார்.? பார்க்கலாம்.

மனிஷா கொய்ராலாவின் கெரியரை முடித்துவிட்ட ரஜினியின் ‘பாபா‘

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மனிஷா கொய்ராலா, பாபா திரைப்படம் தான் கடைசியாக தான் நடித்த பெரிய தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்றும், அந்த காலத்தில் அது மிகப்பெரும் தோல்வியடைந்தது எனவும் கூறியுள்ளார்.

அது தோல்வி மட்டுமல்ல, மிகப்பெரும் டிசாஸ்டராக அமைந்தது என்றும் கூறியுள்ள அவர், அந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அது தோல்வியடைந்த உடன், தன்னுடைய தென்னிந்திய திரை வாழ்க்கை முடிந்தது என்று எண்ணியதாகவும், அது போலவே தான் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

பாபா திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, பல நல்ல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததாகவும், பாபா தோல்வியடைந்த உடன், எனக்கு வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

புகழின் உச்சிக்கு வந்த மனிஷா கொய்ராலா

1989-ம் ஆண்டு, நேபாள திரைப்படமான ‘பெரி பேதௌலா‘ மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் மனிஷா கொய்ராலா. பின்னர், 1991-ல் சுபாஷ் கய் இயக்கத்தில் வெளியான ‘சௌதாகர்‘ திரைப்படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தொடர்ந்து, 1995-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்‘ திரைப்படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, தொடர்ந்து, இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா என கமல், ரஜினி வரை ஜோடி போட்டு, புகழின் உச்சிக்கு சென்றார் மனிஷா கொய்ராலா.

பின்னர் ஒரு கட்டத்தில் இவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க, மது பழக்கத்திற்கு அவர் அடிமையானார். மறுபுறம் கேன்சரால் பாதிக்கப்பட்டு, பின்பு மீண்டு வந்துள்ளார் மனிஷா.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான ஹீராமண்டி வெப் தொடர் மூலம் மிகப் பெரிய ரீ என்ட்ரியை அவர் கொடுத்தார். அந்த வெப் தொடர் பெரிய அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தன திரை வாழ்க்கையின்போது, பலருடன் உறவில் இருந்ததாக சர்ச்சைகளிலும் சிக்கிய மனிஷா, 2010-ம் ஆண்டு சாம்ராட் தாஹல் என்பவரை திருமணம் செய்து, 2 ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்தார்.

தற்போது திரைப்படங்களில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அவர், சமீபத்திய பேட்டியில், பாபா திரைப்படத்தால் தனது தென்னிந்திய திரை வாழ்க்கை முடிந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002-ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாபா திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தானே தயாரித்திருந்தார் ரஜினிகாந்த். ஆக, மனிஷா கொய்ராலாவின் தென்னிந்திய கெரியர் முடிய ரஜினிதான் காரணம் என அவர் கூறாமல் கூறியுள்ளதாகத் தானே அர்த்தம்.?

Related Post

சன் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்… புரொமோவுடன் இதோ

Posted by - September 23, 2025 0
சன் டிவி சன் டிவி, எப்போதுமே சீரியல்களின் ராஜாவாக இருப்பவர்கள். காலை தொடங்கி இரவு வரை சீரியல்களை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல்,…

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

Posted by - April 5, 2023 0
Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். உண்மையிலேயே நம்முடைய மொபைல்…

அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்

Posted by - October 23, 2024 0
சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *