முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

317 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என வெளிப்படையாகவே அவர் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் இருவரும் இருந்த மேடையில் கூட ஜெயலலிதாவை எதிர்த்து தில்லாக பேசிய நடிகரும் ரஜினி தான். ஆனால் ஜெயலலிதாவை அவர் எதிர்ப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சம்பவம் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தால் காலகட்டம் அது. அப்போது ரஜினி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பயணித்த போது போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏன் என்று விசாரித்த போது முதல்வர் வாகனம் வருகிறது அதனால் காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

ஜெயலலிதாவை எதிர்த்த ரஜினி

எவ்வளவு நேரம் ஆகும் என தலைவர் விசாரித்திருக்கிறார். போலீசார் அரை மணி நேரம் என்று சொன்னதில் அவ்வளவு பெரிய காரா வருகிறது என கேட்டுவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்திருக்கிறார்.

பிறகு காரை விட்டு இறங்கி அருகில் இருந்த பெட்டி கடையில் சிகரெட் வாங்கி இருக்கிறார். அதை தன்னுடைய ஸ்டைலில் பற்றவைத்து மாஸாக அங்கு நின்றாராம். உடனே அவரைப் பார்த்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

இதனால் அந்த இடம் பரபரப்பாக மாறி இருக்கிறது. உடனே பதறிப்போன போலீசார் முதல்வர் வரும் நேரத்தில் இவ்வளவு கூட்டம் இருப்பது நல்லது கிடையாது என ரஜினியை நீங்கள் போகலாம் சார் என பவ்யமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வந்த தேர்தலில் தான் ரஜினி ஜெயலலிதாவை எதிர்த்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இப்படி முதல்வரையே எதிர்த்து தில்லாக சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார் என அப்போதே கொண்டாடப்பட்டார். அதை இப்போது ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - டிசம்பர் 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - ஆகஸ்ட் 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

Posted by - மார்ச் 8, 2024 0
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.…
குடியரசுத் துணைத் தலைவர் வருகை காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதி

குடியரசுத் துணைத் தலைவர் வருகை சென்னையில் ட்ரோன் தடை

Posted by - நவம்பர் 20, 2026 0
குடியரசுத் துணைத் தலைவர் வருகை காரணமாக தலைநகர் சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் உயரிய பதவியில் உள்ள முக்கிய நலம் விரும்பியும் தலைவருமான…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - செப்டம்பர் 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன