மோசமான சிபில் ஸ்கோர் இருக்கிறதா? இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

293 0

உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதாவது தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதை சரி செய்யும் படி கிரெடிட் பியூரோவை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை கடன் தரும் வகையில் அதிகப்படுத்த பல வழிகள் உள்ளது. உங்களின் கிரெடிட் கார்ட் கடனை குறைப்பது, தவணை கட்டாத கணக்குகளைச் சரி செய்வது, புதிய கணக்குகளை திறக்காமல் இருப்பது போன்ற வழிமுறைகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் சில வழிமுறைகள்:

கிரெடிட் ரிப்போர்ட்:

சிபில் (CIBIL) அமைப்பிடம் இருந்து உங்கள் கடன் அறிக்கையை பெறுங்கள். அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறைபாடோ இருக்கிறதா என கவனமாக பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால் அது நிச்சயம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

தவணை கட்டாத கணக்குகளை சரி செய்யுங்கள்:

உங்கள் கணக்குகளில் எதிலாவது கடந்த காலங்களில் தவணை செலுத்தாமல் நிலுவை இருந்தால், அதை சீக்கிரம் முடிக்கப் பாருங்கள். உங்களுக்கு கடன் தந்த நிறுவனத்திடம் பேசி, திரும்ப செலுத்தும் வசதி உள்ளதா அல்லது கடனை முடித்துக்கொள தீர்வு ஏதாவது இருக்கிறதா என்பதை கலந்தாலோசியுங்கள்.

தவறுகளை களையுங்கள்:

உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதாவது தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதை சரி செய்யும் படி கிரெடிட் பியூரோவை தொடர்பு கொள்ளுங்கள். அதற்குண்டான சரியான ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பியுங்கள். இதுபோன்ற தவறுகளை சரி செய்வதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த முடியும்.

கிரெடிட் கார்டு பேலன்ஸை குறையுங்கள்:

உங்கள் கிரெடிட் கார்டின் பேலன்ஸ் தொகை அதிகமாக இருந்தால், அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். உங்களின் கிரெடிட் பயன்பாட்டு விகிதங்களை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கிரெடிட் கார்ட் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்திருங்கள்.

புதிய கணக்குகளை திறக்காதீர்கள்:

புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற ஆசை உங்களுக்கு வரும். ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் தயவுசெய்து இந்த தவறை செய்யாதீர்கள். நீங்கள் புதிய கணக்குகள் திறந்தால், உங்கள் கிரெடிட் அறிக்கையை புதிதாக விசாரிக்க வேண்டிவரும். இது தற்காலிகமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும்.

உத்தரவாதமான கிரெடிட் கார்டு:

பாரம்பரியமான கிரெடிட் கார்டு வாங்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை என்றால், உத்தரவாதம் அளிக்கும் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கவும். இந்த கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் சிறு தொகையை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். இதனால் எந்த பயமுமம் இன்றி கடன் தரும் நிறுவனங்கள் இந்த கார்டை வழங்குகின்றன. மோசமான கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பொறுமை ரொம்பவும் முக்கியம்:

நம்முடைய மோசமான கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு வர அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். உங்கள் நிதிநிலை விஷயங்களில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தவணை கட்டுவது, பேலன்ஸை குறைவாக வைத்துக்கொள்வது, அடிக்கடி நமது வளர்ச்சியை கண்காணிப்பது போன்றவை உதவியாக இருக்கும். காலப்போக்கில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரில் நிச்சயம் எதிரொலிக்கும்.இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவதோடு பொறுப்பாக நடந்து கொண்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்லபடியாக அதிகரிக்க முடியும்.

Related Post

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - டிசம்பர் 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

Posted by - பிப்ரவரி 2, 2024 0
என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - செப்டம்பர் 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

“மணி பிளான்ட்” வீட்டில் வைத்தால் பணம் சேரும் என்பது உண்மையா?

Posted by - மார்ச் 28, 2023 0
Money plant மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கு, எப்படி வைத்தால் பணம் வரும், மணி பிளான்ட்டின் தன்மை என்பது…

Dry ice – ஏன் இது உயிருக்கே ஆபத்தானது..?

Posted by - மார்ச் 9, 2024 0
பலரும் அறியாத உலர் ஐஸ் குறித்தும் அதன் ஆபத்துகள் …. Dry ice-ஆல் வந்த வினை… டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னரை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன