ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

247 0

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர் நாய் உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பெயர் டோகோ. இவர் சிறு வயது முதலே நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். நான் நாயாகவே பிறந்திருக்கலாம் என அடிக்கடி தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.WATCH: Japanese Man Spends Rs 12 Lakh on Costume to Look Like a Dog - News18

இந்நிலையில் நாயாக மாற வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக அவர் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடையை உருவாக்கி உள்ளார். பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு நகரில் உள்ள பூங்காவில் வலம் வந்தார். பார்ப்பதற்கு நாய் போலவே தோன்றிய அவருடன் அப்பகுதியில் உள்ள நாய்கள் நட்பை வளர்த்து வருகின்றன. டோகோ, ‘ஐ வாண்ட் டு பி அனிமல்’ என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இவரது சேனலுக்கு 35 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவரது நாய் தோற்ற உடையை அங்குள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. அவரின் மொத்த அடையாளத்தையும் மறைத்து முழுமையான நாயாக மாற்றுவதற்கு 40 நாட்கள் ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டோகோ நாய் போலவே தரையில் சுற்றிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

Related Post

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம் மறுசீரமைப்பு

Posted by - July 6, 2023 0
சார்ஜா: சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி…

கோலாகலமாக தொடங்கியது 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள்..!!

Posted by - July 27, 2024 0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…
tower

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

ஹனிமூனுக்கு ஏன் ’ஹனிமூன்’ என பெயர் வந்தது தெரியுமா..?

Posted by - November 23, 2024 0
ஆக்ஸ் ஃபோர்ட் டிக்‌ஷரி ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று வரையறுக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *