வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

307 0

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்வது வழக்கம்.அந்த வகையில் வாட்ஸ்-அப் மெசஞ்சரில் பயனர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சம், வீடியோ அழைப்பில் பேசும்போது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதிலும் பேக்கிரவுண்டை மாற்றும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்கள் விரைவில் உலக அளவில் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் என தகவல். இது அனைத்து தரப்பு பயனர்களையும் ஈர்க்கும் என மெட்டா நம்புகிறது.

காரணம் என்ன? – அண்மைய நாட்களாக இந்தியாவில் உள்ள பயனர்கள் மத்தியில் சோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி பேசுபொருளாகி உள்ளது. இந்திய அளவில் ஆப் ஸ்டோரில் ‘மெசேஜிங் ஆப்’ பிரிவில் அரட்டை முன்னிலை பெற்றுள்ளது. அரட்டை செயலியின் டவுன்லோட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மெட்டா உட்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய சந்தை முக்கியமானதாக அமைந்துள்ளது.

அரட்டை செயலியை வாட்ஸ்-அப் உடன் ஒப்பிடும் போது வாட்ஸ்-அப்பில் இருப்பது மாதிரியான அம்சங்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களது பிடியை தளர்த்த கூடாது என்பதில் மெட்டா உறுதியாக இருப்பதனால் புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக டெக் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Related Post

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - பிப்ரவரி 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

Posted by - ஜனவரி 5, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை,…
அக்வான் புயல் காரணமாக வீசும் பலத்த காற்று மற்றும் மழை

அக்வான் புயல் கரையை கடக்கிறது: தமிழ்நாட்டில் மழை நிலவரம்

Posted by - நவம்பர் 20, 2026 0
அக்வான் புயல் வங்கக்கடலில் தீவிரமடைந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே கோபால்பூர் அருகே கரையைக் கடந்து வருகிறது. இந்திய வானிலை…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - பிப்ரவரி 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன