விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? – எடப்பாடி பேச்சு

162 0

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய விஜயின் தவெக மற்றும் சீமான் ஆகியோருக்கு, எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி நச் பதில்கள்:

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக உடனான கூட்டணி, திமுக மீதான குற்றச்சாட்டுகள் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த சுற்றுப் பயணத்தின் போது பேசி வருகிறார். இந்நிலையில் தான், தனியார் ஊடகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் வியூகம், கூட்டணியை பலப்படுத்துவது மற்றும் திமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கூட்டணி ஆட்சியா?

பாஜக தலைவர்கள் சொல்வதை போன்று தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா? என்ற கேள்விக்கு, “தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அவர்கள் கூறிவருகின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதேநேரம் பாஜக – அதிமுக கூட்டணி உடையாது, அதற்கான முயற்சிகளும் பலனிக்காது. எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

பாஜகவிற்கு பதிலடியா?

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறிய நிலையில், அதற்கு நாங்கள் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி

2026ம் ஆண்டு தேர்தல் குறித்த கேள்விக்கு, “2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். அந்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் ஒற்றைக் கட்சிதான் ஆட்சியமைத்துள்ளதாகவும், அடுத்த தேர்தலிலும் இதுவே தொடரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய், சீமானுக்கு அழைப்பு:

கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, “திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரலாம் என்பது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். ஆனால், கூட்டணி தொடர்பாக விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை” என எடப்பாடி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் வருவாரா?

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாலும், தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் தான், பாஜக உள்ள கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என திட்டவட்டமாக கூறிய, தவெகவை தங்கள் கூட்டணிக்கு வர எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார். இது சாத்தியமாகுமா? தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால், கூட்டணியில் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

Gemini Generated Image pkuqg2pkuqg2pkuq

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

Posted by - August 4, 2025 0
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசியல் நாளுக்கு…
Generated Image November 17 2025 11 34AM

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - October 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - September 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *