வெயிலுக்கு இதம் தரும் வெள்ளரிக்காய் மில்க் ஷேக்.. டிரை பண்ணி பாருங்க..!

225 0

வெள்ளரி உடல் எடையை குறைக்க உதவும் என தெரியும். ஆனால், சிறுநீரக கல்லை கரைக்க இது உதவும் என உங்களுக்கு தெரியுமா?. சிறுநீரக கற்களை கரைக்க உதவும் வெள்ளரிக்காய் மில்க் ஷேக் செய்யலாமா?.

வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உச்சி முதல் பாதம் வரை அனைத்திற்கும் நல்ல ஆரோக்கிய நன்மையை குறைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு சிறுநீரக கற்களை கரைக்க உதவும் மில்க் ஷேக்யை வெள்ளரிக்காய் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.வெள்ளரிக்காய் லஸ்ஸி செய்து குடித்திருக்கிறீர்களா..? இன்றே டிரை பண்ணி பாருங்க ..!

இது சிறுநீரக கற்களை குறைப்பதுடன், சரும ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்ல, கோடை வெயிலுக்கு இதமான உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும். வெள்ளரிக்காய் மில்க் ஷேக் தயாரிக்கும் முறையை இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 3.

பால் – 1.5 கப்.

ஏலக்காய் – 10.

சர்க்கரை – 3 ஸ்பூன்.

ஐஸ்கட்டி தேவையான அளவு.

செய்முறை படி :

மில்க் ஷேக் செய்ய எடுத்துக்கொண்ட வெள்ளரிக்காயை, முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இதனிடையே மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில் ஏலக்காய் மற்றும் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தற்போது இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து போதுமான அளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இதுனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு ஒருமுறை அரைத்துக்கொள்ள சுவையான வெள்ளரிக்காய் மில்க் ஷேக் ரெடி!.

பதமாக தயார் செய்த இந்த மில்க் ஷேக்கினை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் விளிப்பில் ஒரு வெள்ளரிக்காய் துண்டினை வைத்து கவர்ச்சியாக பரிமாறலாம். சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்தும் பரிமாறலாம்.

பயன்கள் :

வெள்ளரிக்காய் மற்றும் பால் கொண்டு தயார் செய்யப்படும் இந்த மில்க் ஷேக்கில் போதுமான அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது, சிறுநீரக பாதை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவுகிறது.

அதுமட்டும் அல்ல, வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவு.

தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும். வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது.

Related Post

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக்

Posted by - March 3, 2023 0
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை…

யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 6, 2024 0
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அருமையான சுவை…
mookuthi amman

மூக்குத்தி அம்மன் … எந்த சேனலில் வருகிறது பாருங்க

Posted by - June 9, 2026 0
மூக்குத்தி அம்மன் பெயரை சொன்னதும் எல்லோருக்கும் நயன்தாரா – ஆர்ஜே பாலாஜி நடித்த படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே பெயரில் தற்போது ஒரு புது…

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

Posted by - November 3, 2023 0
தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *