1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்…

185 0

காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியலையா? இட்லி சுடலாம் என்றால் இட்லி மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?

அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு இட்லி சுடுங்கள். இந்த இட்லி செய்வதற்கு சுபலமாக இருப்பதோடு, தேங்காய் சட்னியுடன் சாபிட அட்டகாசமாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்...  | Godhumai Rava Idli Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கோதுமை ரவை – 1 கப் * தயிர் – 3/4 கப்

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கேரட் – 1-2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

* கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

* சோடா உப்பு – 1 சிட்டிகை

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு வறுத்த கோதுமை ரவையை தயிருடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* ஒருவேளை கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால், இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அதில் கேரட், கொத்தமல்லியைத் தூவி, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள இட்லி கலவையை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10-12 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான கோதுமை ரவை இட்லி தயார்.

Related Post

என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு

Posted by - August 2, 2023 0
வடிவேலு நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு…
asdfghjm

கசிந்த தகவல் Bigg Boss Tamil 9 – வெற்றி பெற போவது இவர்தானா?….

Posted by - November 14, 2025 0
#BiggBossTamil9 #BiggBossTamil #BBTamil9 #பிக்பாஸ் #Kamrudin #KamrudinArmy #Soundariya  #VJVishal  #BB9TitleWinner #BB9Finalists #BiggBossTamil9 #Kamrudin #BBTamil9 #BB9TitleWinner #பிக்பாஸ்தமிழ்9 #BiggBossUpdates #Love#Photography#PhotoOfTheDay#InstaDaily#Fashion#TamilNadu #Tamil #Chennai #TrendingTamil…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா? யார் அந்த நடிகர்

Posted by - July 10, 2023 0
ஐஸ்வர்யா – தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள் என…

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *