2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

185 0

2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும் வேட்டையன், கங்குவா போன்ற படங்கள் இந்த வருட ரிலீஸுகாக காத்திருக்கிறது. அடுத்த வருடம் பெரிதும் ஏழு படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது அடுத்த ஆண்டு தொடக்கமே அஜித்தின் வருடமாக இருக்கப் போகிறது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதித் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. துணிவு படத்திற்குப் பிறகு அஜித்தின் படங்கள் வெளியாகாததால் அஜித்தின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

ஆனால் அடுத்த வருடம் குட் பேட் அக்லி மட்டுமல்லாமல் விடாமுயற்சி படமும் வர இருக்கிறது. இதனால் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். அடுத்ததாக லோகேஷ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகி வருகிறது கூலி படம். இப்போது ரஜினியின் உடல்நிலை பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 7 படங்கள்

மேலும் விரைவில் ரஜினி கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என லோகேஷ் கூறியிருந்தார். கூலி படமும் 2025 இல் வெளியாக இருக்கிறது. மேலும் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படமும் அடுத்த ஆண்டு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விக்ரமுக்கு இந்த ஆண்டு தங்கலான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த ஆண்டு வீரதீர சூரன் படம் வர இருக்கிறது. மேலும் சூர்யாவுக்கு இந்த வருடம் கங்குவா ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்த வருடம் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 44 வது படம் வெளியாக உள்ளது.மேலும் 2025இல் கழுகு போல் ரசிகர்கள் காத்திருக்கும் படம் தளபதி 69 தான். தனது பத்து வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கிய விஜய் 40 வருட சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். வினோத் இயக்கத்தில் உருவாகும் தளபதி 69 விஜய்யின் கடைசி படம். ஆகையால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Related Post

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

Posted by - August 9, 2023 0
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம்…

ரவி மோகன் ‘கராத்தே பாபு,தவெக தலைவர் விஜய்’ புகைபடம்!

Posted by - January 31, 2025 0
ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு திரைபடத்தின் டைட்டில் டீசர் வெளியானது அதில் அரசியல் களத்தில் ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் .டீசரில் வெளியான புகைபடத்தினை…

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022 0
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம்…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த ‘சில்லா சில்லா’

Posted by - December 10, 2022 0
அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *