ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

299 0

தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகம் வேண்டாம் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய உதயநிதி, படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார்.உதயநிதி ஸ்டாலின் நடிப்பை தாண்டி தயாரிப்பு மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.  அவரின் ரெட் ஜெயின்ட் நிறுவன மூலம் பல திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதுவரை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.  ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகம் நீக்கப்படுகிறது.  இனிவரும் காலங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்ற பெயர் மட்டுமே அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இடம்பெறும். இது சமீபத்தில் உருவாகியுள்ள செம்பி மற்றும் வாரிசு படங்களின் விளம்பரங்களில் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

Related Post

மருதாணி.. செக்கச்சிவந்த மருதாணி.. ஆமா, மருதாணி வெச்சதுமே, கைகள் சிவப்பு கலரா மாறிடுதே.. ஏன் தெரியுமா

Posted by - November 3, 2023 0
சென்னை: அழகுக்காக மட்டுமே நினைத்து, பலரால் ஒதுக்கப்படுவது மருதாணி.. உண்மையை சொல்லப்போனால், இந்த மூலிகையின் அற்புத பலன்களை பட்டிலியட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நீளும் நன்மைகளை,…

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

Posted by - July 8, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு…

செயலற்று கிடக்கும் மாநகராட்சி;கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Posted by - February 22, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *