தீபாவளிக்கு 1 நாள் மட்டுமே! தமிழ்நாட்டின் கடைத் தெருக்களில் குவிந்த மக்கள்

228 0

  • #Diwali

  • #HappyDiwali

  • #Diwali2023 (or current year)

  • #FestivalOfLights

  • #DiwaliCelebration

  • #DiwaliVibes

  • #IndianFestival

  • #Deepavali

  • #DiwaliDecorations

  • #DiwaliGifts

  • #DiwaliSweets

  • #DiwaliShopping

  • #LightUpYourLife

  • #JoyOfDiwali

  • #FestiveSeason

தீபாவளி முன்னிட்டு திருச்சி, மதுரை, கோவை, சென்னை, புதுச்சேரி, நாகை, ஈரோடு, தென்காசி பகுதிகளில் கடைவீதிகள் மக்கள் கூட்டம், பட்டாசு, ஆடைகள், பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டனர்.
தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் மக்கள் படையெடுத்ததால் கடைவீதிகள் திக்குமுக்காடின.. திருச்சியின் வணிக மையமாக திகழும் சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு, மலைவாசல் மற்றும் பெரிய கடைவீதி, பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஷோரூம்களில் ரெடிமேட் ஆடைகள் வாங்கவும், தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மதுரை மாசி வீதிகளில் தீபாவளி பண்டிகைக்கான இறுதி கட்ட விற்பனை களைகட்டியது. புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் மும்முரமாக இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் ஜன திரளாகக் இருந்த போதிலும் காவல்துறையினர் தொய்வின்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கம்மல், வளையல், தோடுகள், காலணிகள், பெல்ட்டுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. மழை குறிக்கிடாததால் வியாபாரிகள் நிம்மதியடைந்தனர். ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தியாகராய நகரில், எதிர்பார்த்த அளவைவிட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தியாகராய நகரில் தீபாவளி ஷாப்பிங் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில் 500 வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி 4,500 ரூபாய் வரையிலான ‘கிப்ட் பாக்ஸ்’ கிடைக்கின்றன. குழந்தைகளை கவரும் வகையில் பணமழை பெய்யும் வெடி, லாலிபாப், சாக்லெட், கதாயுதம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான பட்டாசுகளுக்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது.

சலுகை விலையில் துணிகள் வாங்க சிறந்த இடமான பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதி, மக்கள் கூட்டத்தால் வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் கடைகளின் வாசல்களில் பல்வேறு சேலை ரகங்கள், பேண்ட் சர்ட்டுகள், சுடிதார்கள் என காட்சிக்காக தொங்கவிடப்பட்டு வாடிக்கையாளர்களை வரவேற்றன.

சென்னை புறநகரான தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தீபாவளி ஷாப்பிங் கூட்டம் அலைமோதியது. ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம், குரோபேட்டை, பல்லாவரத்தில் பெரிய கடைகளில் குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

புதுச்சேரியில் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, தட்டாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சிலிண்டர் வெடி, அனுமன் கஜா, பேட்-பால் வெடி, பீக்காக், குஷி Gift box போன்றவை மக்களின் விருப்பமாக இருந்தது. பட்டாசு வெடிப்போரின் பாதுகாப்பிற்காக கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நாகையில் பெரிய கடைத்தெரு, நீலா கீழ வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முக்கிய வீதிகள் தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
ஈரோடு ஆர்கேவி சாலை, காவிரி சாலை, பெருந்துறை சாலை, பன்னீர்செல்வம் பூங்கா, மேட்டூர் சாலை ஆகிய பகுதிளில் உள்ள ஜவுளி கடைகள் பொதுமக்கள் வருகையால் களைகட்டின. பட்டாசு கடைகளில் விதவிதமான பட்டாசுகளை வாங்கினர். அதேபோல் பலகாரங்கள் வாங்க பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக கடந்த இரண்டு நாளுக்கு பிறகு தீபாவளி விற்பனை சூடுபிடித்தது. ஞாயிறு விடுமுறை மற்றும் நாளை தீபாவளியை ஒட்டி, இன்றும் கடைவீதிகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

Posted by - December 18, 2024 0
திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இடங்களில் சில…

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *