ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

252 0

டோக்கியோ:

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன.Thousands of crows flock streets of Japanese island | ஜப்பானில் தீவு  முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் - இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

அதோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த விசித்திர நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. அதே சமயம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Post

அடங்காத ரத்தவெறி..

Posted by - July 26, 2025 0
#Gaza #Trump #IsraelIsrael #GazaWar #WorldNews காசாவில் இறக்க வேண்டும் என்ற ஹமாஸின் ஆசையை இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.…

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Posted by - July 31, 2023 0
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர்…

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

Posted by - May 22, 2025 0
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின்…

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

Posted by - December 27, 2022 0
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *