சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

295 0

சென்னை:

சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.Think the Rs 2,000 note was the highest currency note in Indian history?  It's time to think again!

அதை நம்பி ஏராளமான பேர், அந்த நிறுவனத்தில் முதலீட்டு தொகையை கொண்டு கொட்டினார்கள். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. அசல் தொகைக்கும் பட்டை நாமம் போட்டு விட்டது.

ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக 1,500 ஆயிரம் பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தார்கள். தற்போது 10 ஆயிரம் பேர்களிடம் பணத்தை சுருட்டியது அம்பலமாகி உள்ளது. மோசடி தொகையும் ரூ.500 கோடியில் இருந்து ரூ.800 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் அலெக்சாண்டர், சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளி நேரு (வயது 49) என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான மணிகண்டன் (51) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இதர 19 குற்றவாளிகளில் 3 முக்கிய பெண் குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களது பெயர் திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரைச் சேர்ந்த சுஜாதா என்பதாகும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடி கம்பெனியில் இவர்கள் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான இவர்கள் 2,835 பேர்களிடம், ரூ.235 கோடி அளவுக்கு பணத்தை வசூல் செய்து கொடுத்து, மோசடிக்கு முக்கிய ஆணி வேர்களாக செயல்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Post

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted by - September 2, 2024 0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்…

ஏசி வாங்க பட்ஜெட் இல்லையா? கோடையை சமாளிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏசிக்களின் பட்டியல் இதோ.

Posted by - May 2, 2024 0
MarQ FKAC103SFAA  : இந்த ஏசியின் விலை வெறும் 18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டட் ஏசிக்கு 230 வி 50 ஹெர்ட்ஸ் மின்சாரம் தேவைப்படும். இந்த…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *