குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!
திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர் வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய , நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடவாசல் பேருந்துநிலையம் முன்பு, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் இனியன் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்திருந்தனர். நேற்று அதிகாலை கொடிகம்பம் பிடுங்கப்பட்டு காணாமல் போனது. இதனை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அகற்றியதாக