Generated Image January 18 2026 4 47PM

Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..

140 0

Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது. இந்த இறுதி சுற்றில் திவ்யா கணேஷ், அரோரா, சபரி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதற்கிடையே, அவர்களில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.  திரைத்துறை பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் என கலவையாக இந்த சீசனில் நுழைந்தனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதல் மக்கள் மத்தியில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மாறாக, இந்த சீசனில் எந்த கன்டென்ட்டும் இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்தன.இதற்கிடையே தான் வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது. அதுவும் குறைந்த நாட்களிலேயே வைல்டு கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பிய வரலாறும் இந்த சீசனில் தான் அரங்கேறியது. இந்த சீசனுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் ஆட்டத்தை மாற்றும் வகையில் 4 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே அனுப்பப்பட்டனர்.  அதன்படி, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்கள். ஆனால், அப்போதும் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் கூச்சலும் குழப்பமும் ஆகவே நிகழ்ச்சி தொடர்ந்தது.ஆனால், வோட்டிங் அடிப்படையில் வினோத் டாப்பில் இருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து, அரோரா தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வோட்டிங் அடிப்படையில் திவ்யா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால் அவர் தான் டைட்டிலை வெல்வார் என்று கணிக்கப்பட்டது.

Related Post

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

இணையத்தை கலக்கும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்

Posted by - May 30, 2023 0
வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்…

அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

Posted by - May 25, 2024 0
“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?”…

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *