Breaking News By Election Results

இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு.. அமைச்சரவையை மாற்றி அமைக்க ரெடியாகும் விஜய்? யார் பதவி போகப்போதோ?

101 0

சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றி அமைக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் மட்டும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிக மிக அவசியமானதாக மாறியுள்ளது.

அமைச்சர்கள் செயல்பாட்டில் அதிருப்தி:

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் தவெக

இடைத்தேர்தலுக்கு பிறகு:

சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள சரத்குமார், கீர்த்தனா, பர்வேஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் செயல்பாட்டில் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், அவர்களது அமைச்சரவை பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், கட்சிக்கு புதியதாக வந்த மாற்றுக்கட்சியின் முக்கிய நபர்கள் அனைவரும் அமைச்சரவையில் இருக்கும் நிலையில் ரசிகர் மன்ற காலம் முதல் இருந்து வந்த பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அவர்கள் அமைச்சரவையில் இடம் கோரி தொடர்ந்து பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போட்டா போட்டி:

இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து யார்? யாரை நீக்கலாம்? புதிய அமைச்சரவை பட்டியலில் யார்? யாரை சேர்க்கலாம்? என்ற பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களிடம் முதலமைச்சர் விஜய் ஒதுக்கியிருந்தார். அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.

அமைச்சரவை மாற்றப்பட்டால் புதியதாக புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று சிலர் ஆர்வத்துடன் கட்சித் தலைமையை அணுகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, கூட்டணி கட்சியிலும் காங்கிரஸின் விஸ்வநாதன் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கூட்டணி கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு வேறு சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆட்சியில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் விஜய்க்கு அதிருப்தி இருப்பதாகவும், இதனால் பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் பல நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

Related Post

த.வெ.க முதல் மாநாட்டிற்கு இவங்க யாரும் வர வேணாம்.. விஜய் அதிரடி உத்தரவு

Posted by - அக்டோபர் 21, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு! அந்த வரிசையில் தமிழக அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். இதுவரை அரசியலில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத அவர் பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த…

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை : சீமான் , திருமாவளவனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

Posted by - ஜூன் 10, 2024 0
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக…

“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

Posted by - மார்ச் 8, 2025 0
அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என…

”சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது…” எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

Posted by - மார்ச் 22, 2023 0
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல்…

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

Posted by - ஜூன் 1, 2023 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன