COPY RIGHT சர்ச்சை! 20 கோடி கேட்டாரா தனுஷ்.. விளக்கம் அளித்த இயக்குநர் வெற்றிமாறன்

135 0

வெற்றிமாறன் –  எஸ்டிஆர் 49

விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் எஸ்டிஆர் 49 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் அந்த வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ளது. எஸ்டிஆர் 49 திரைப்படம் வடசென்னை 2 என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், வடசென்னை பட தயாரிப்பாளர் தனுஷ் COPY RIGHT-ஆக ரூ. 20 கோடி கேட்டதாக தகவல் வெளிவந்தன.

இது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கான விளக்கத்தை இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்துள்ளார்.

எஸ்டிஆர் 49 வடசென்னை 2-வா?

“எஸ்டிஆர் 49 திரைப்படம் வடசென்னை 2 ஆக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது. அதை நான் கவனித்தேன். ஆனால், அது வடசென்னை 2 கிடையாது. தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 அன்புவின் எழுச்சியாக இருக்கும். இந்தப் படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் ஒரு கதை. அதாவது அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சில விஷயங்கள் எல்லாம் இப்படத்தில் இருக்கும்”.

தனுஷ் 20 கோடி கேட்டாரா?

தனுஷ்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதற்காக அவரிடம் நாம் உரிமை கேட்கவேண்டும். ஆனால், COPY RIGHT குறித்து தனுஷிடம் பேசும் போது, ‘சார் உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை பண்ணுங்க. நாங்க எங்க சைடுல இருந்து NOC கொடுத்துடறோம், பணம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்லிட்டார். ஆனால், இது குறித்த வதந்திகளை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு” என கூறியுள்ளார்.இதன்மூலம் ரூ. 20 கோடி தனுஷ் கேட்டார் என பரவி வதந்திக்கு இயக்குநர் வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Post

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…

தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

Posted by - February 15, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்

Posted by - March 12, 2024 0
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *