Generated Image November 15 2025 10 36AM

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

225 0

CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.

CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ராஜஸ்தான் அணிக்கு ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் சிஎஸ்கே சார்பில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடருக்காக 18 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்ட ஜடேஜாவிற்கு, ராஜஸ்தான் அணியில் தற்போது 14 கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அதே 18 கோடி ரூபாய் ஊதியத்தை சஞ்சு சாம்சனுக்கு வழங்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாம். சென்னை அணியால் வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கேவின் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி, எதிர்கால கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.

சென்னை அணியின் பதிவு:

ஜடேஜாவை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில், உருக்கமான பதிவு  ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பயணத்தை குறிக்கும் வகையிலான, உணர்வுப்பூர்வமான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

 

வீரர்கள் எப்படி?

  • ரவீந்திர ஜடேஜா 2012 முதல் சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். ஜடேஜா சூப்பர் கிங்ஸ் அணிக்காக 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளதோடு,  2300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
    • சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 4500 ரன்களுக்கு மேல் அடித்த அனுபவம் வாய்ந்த வீரராவார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐபிஎல்லில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சாம்சன் ஐந்து ஐபிஎல் சீசன்களில் (2021 முதல் 2025 வரை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியில் அவர் இடம்பெற உள்ள நான்காவது அணி சிஎஸ்கே ஆகும்.

     

    • 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் சாம் கரன் இடம் பெற்றிருந்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2020, 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள கரான், 356 ரன்கள் எடுத்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Post

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

மார்ச் 22-இல் IPL போட்டிகள் தொடக்கம்… முதல் 21 மேட்ச்சுக்கான அட்டவணை வெளியானது!!

Posted by - February 23, 2024 0
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2024…
Generated Image February 23 2026 10 20AM

முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

Posted by - February 23, 2026 0
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

Posted by - September 15, 2025 0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *