Esakki Subaya

Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!

97 0

என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும் என தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா கூறியுள்ளார்.

ராஜினாமா செய்த நிலையில் தான் மீண்டும் எம்.எல்.ஏவாக தொடர அனுமதிக்கக்கோரிய வழக்கில் என்ன நடந்தது என்பதை தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா விவரித்துள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

ராஜினாமாவை திரும்ப வாங்க தயார்

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “ராஜினாமாவை என் விருப்பத்தோடு சுயநினைவோடு யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன விதிப்படி கொடுக்கணுமோ அதை கைப்பட எழுதி கொடுத்தேன். அதனை தீர விசாரித்து சபாநாயகர் என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜிமானாவை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி என்னுடைய அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கவும் செய்தார். இதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.

அதேசமயம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். அது எதற்காக தொடர்ந்தார் என தெரியாது. ராஜினாமாவை ஏற்கும் முழு அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அந்த வழக்கு உடனடியாக முடிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதுவரை என்னை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக செயல்பட விடுங்கள் என கூறினேன்.

தகுதி நீக்கத்தை விட ராஜினாமா மேல்

எதற்காக எனக் கேட்டால் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைப் பார்க்க ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும். அந்த அடிப்படையில் என்னை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டேன். என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும். இன்னும் ஒருபடி மேலே சென்று இதில் சட்ட சிக்கல் ஏற்பட்டால் என்னுடைய ராஜினாவை திரும்ப பெறவும் நான் தயாராக உள்ளேன்.

என்னுடைய முந்தைய தலைமையான அதிமுக எந்தவித காரணமும் கேட்காமல் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய சொல்லி கூறியது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என எதுவும் கேட்கவில்லை. 13 நாட்கள் கழித்து நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே முன்வந்து ராஜினாமா செய்தேன் என தெரிவித்தார்.

தவெகவுடன் மனக்கசப்பா

அதுமட்டுமல்லாமல் தவெகவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக பரவும் தகவலுக்கும் இசக்கி சுப்பையா விளக்கமளித்துள்ளார். அதாவது, “நான் தவெகவை விரும்பி ஏற்றுக் கொண்டேன். வாய்ப்பு வழங்கப்படும், வழங்கப்படவில்லை என்பது பற்றி கவலையில்லை. நான் வேட்பாளராக இருந்தால் பார்ப்பதை விட வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அதிகமாக வேலை பார்ப்பேன். நான் அன்றைக்கே சொன்னது போல முதலமைச்சர் விஜயின் ஒற்றை முகம் இந்த தொகுதிக்கு வந்தாலே மாபெரும் வெற்றி தான். தவெகவைச் சேர்ந்தவர்களும் சரி, இங்கு மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் தவெக தான் ஜெயிக்கும்” என கூறியுள்ளார்.

Related Post

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - டிசம்பர் 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..

Posted by - பிப்ரவரி 20, 2025 0
தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் மகளிர் உரிமைத் தொகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான 2026 தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி குறித்து தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற…
%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF

பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்

Posted by - செப்டம்பர் 19, 2026 0
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு விட்டு, இப்போது பாரதிதாசனை ’’தம்பி’’ என்று உருகுகிறார் என…
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

Posted by - ஜூலை 23, 2026 0
திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காலை எலி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
vijay gkvsan

GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்..

Posted by - ஜூலை 10, 2026 0
தமிழ்நாடு முதல்வரான பின் விஜய் முதல்முறையாக இன்று கரூர் செல்கிறார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 32 குடும்பங்களுக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவுள்ளார். இதற்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன