IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

308 0

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை வீழ்த்தி  வெற்றியுடன் சென்னை அணி நடப்பு சீசனை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதன் அடிப்படையில் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக அவரும் விராட் கோலியும் களம் இறங்கி ஓரளவு நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்தனர்.  டூப்ளசிஸ் 35 ரன்னிலும், அடுத்து வந்த ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 78 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து இளம் வீரர் அனுஜ் ராவத் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 38 ரன்களும், அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 48 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் முஸ்தபிசுர் ரகுமான் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை சென்னை அணிக்கு கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களும், டேரில் மிட்செல் 22 ரன்களும் சேர்க்க, சென்னை அணியின் வெற்றி இலகுவானது.

12.3 ஓவர்களில் சென்னை அணி 110 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஷிவம் துபே – ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. துபே 28 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

Related Post

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

Posted by - April 7, 2023 0
IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்…

ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..

Posted by - June 4, 2025 0
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *