MK Stalin

MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

155 0

DMK MK Stalin: இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்டதை ஒன்றாக கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி அக்கட்சி சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முப்பெரும் விழா இன்று நடைபெற இருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

வழக்கமாக முப்பெரும் விழாவின் போது அண்ணா நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதை, திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், இன்று காலை உதயநிதி மட்டுமே அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருந்தார். ஸ்டாலின் அங்கு வரவில்லை. இதனால் ஸ்டாலின் ஏன் வரவில்லை, என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து அறிவாலயம் சார்பில் வெளியான தகவலின்படி, லேசான அசௌகரியம் காரணமாகவே ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரவில்லை என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக விருதுகள்:

இந்த விழாவையொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி,

  • பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
  • அண்ணா விருது – சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
  • கலைஞர் விருது -துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
  • பாவேந்தர் விருது – மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
  • பேராசிரியர் விருது தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
  • மு.க.ஸ்டாலின் விருது – இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - செப்டம்பர் 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - மே 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

புதுச்சேரி

Posted by - ஏப்ரல் 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - ஜனவரி 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

Posted by - பிப்ரவரி 13, 2024 0
இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…! மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன