DMK leaders at a press conference with bold 'BREAKING NEWS' graphic in PixelTamil branding.

DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

121 0

 

சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் குற்றம் சாட்டி வருகிற 31-ஆம் தேதியன்று திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சேலத்தில் பட்டப்பகலில் பொது இடத்திலேயே கொலை நடந்திருப்பதாகவும், மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது மர்மமாகவே உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், தவெக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு Free Run கிடைத்தது போல அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருப்பதாகவும் சாடியுள்ளார். சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர், சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? எனவும் வினவியுள்ளார்.

திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்,
பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளிய தவெக அரசை கண்டித்து வருகிற 31-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - ஜூலை 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - பிப்ரவரி 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…
Generated Image January 09 2026 10 54AM

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - ஜனவரி 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…
புதுச்சேரி திமுக இளைஞரணி கூட்டம் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற காட்சி

திமுக இளைஞரணி கூட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது

Posted by - நவம்பர் 22, 2026 0
புதுச்சேரியில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டம் வாயிலாகக் கட்சி நிர்வாகிகளுக்குப் பல்வேறு புதிய உத்தரவுகளும் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில அளவில் கட்சியின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும்,…

ஐயாவின் புது ரூட்டு!மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்!

Posted by - ஜூலை 12, 2025 0
அன்புமணியுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதியை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான கட்சியாக பாமக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன