2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேஜிக் நம்பர் மிஸ்ஸிங்! தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு சட்டசபை’ சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தவெக வசம் 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 5