fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

135 0

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மேஜிக் நம்பர் மிஸ்ஸிங்! தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு சட்டசபை’ சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தவெக வசம் 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 5 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவு கொடுத்தும், 113 இடங்களையே எட்ட முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ‘வெயிட்டிங்’ மோடில் இருப்பதால் இழுபறி நீடிக்கிறது.

எதிரிகள் நண்பர்களானால்? – புது வினோத கூட்டணி! இங்குதான் ட்விஸ்ட்! விஜய் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ‘எம்.ஜி.ஆர்’ போல உருவெடுத்து விடுவார், அது தங்களின் அரசியல் வாழ்வை காலி செய்துவிடும் என திமுக மற்றும் அதிமுக தலைமை அஞ்சுவதாக தவெக தொண்டர்கள் விமர்சிக்கின்றனர். இதன் உச்சகட்டமாக, 47 இடங்களை வைத்துள்ள அதிமுக ஆட்சி அமைக்க உரிமை கோரினால், திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும் என ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவுகிறது. “நாங்க ரெண்டு பேரும் அடிச்சுப்போம், ஆனா புதுசா ஒருத்தர் உள்ள வர்றதை விடமாட்டோம்” என்பது தான் இப்போதைய ஸ்கிரிப்ட் போல!

விஜய்யின் ‘மாஸ்டர்’ பிளான்: மொத்தமாக ராஜினாமா? தன்னை ஆட்சி அமைக்க விடாமல் ஆளுநரும், மற்ற கட்சிகளும் முட்டுக்கட்டை போடுவதாக விஜய் தரப்பு கருதுவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை திமுக – அதிமுக ரகசிய உடன்படிக்கை மூலம் ஆட்சி அமைக்க முயன்றால், தனது 107 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியை கவிழ்க்க அல்லது மீண்டும் தேர்தலை சந்திக்க விஜய் தயாராகி வருவதாக தகவல்கள் கசிகின்றன.

குழப்பத்தில் மக்கள்! “யாருக்கு ஓட்டு போட்டோம்? இப்போ என்ன நடக்குது?” என மக்கள் ஒருபுறம் தலையை பிய்த்துக்கொள்ள, திமுக எம்.எல்.ஏ.,க்களை மே 10 வரை சென்னையிலேயே இருக்க ஸ்டாலின் போட்ட உத்தரவு இன்னும் பீதியை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட மோசமான இந்த அரசியல் விளையாட்டில், மே 10-ம் தேதி தளபதி கையில் செங்கோல் கிடைக்குமா? அல்லது தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலை நோக்கி நகருமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


#TVKVijay #TNVidhanSabha2026 #ThalapathyVijay #DMK #ADMK #TamilNaduPolitics #PixelTamilNews

Related Post

Generated Image January 05 2026 11 52AM

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - ஜனவரி 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - டிசம்பர் 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…
Generated Image March 04 2026 6 06PM

70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்!

Posted by - மார்ச் 4, 2026 0
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தங்களிடம் 70 தொகுதிகளை ஒப்படைக்குமாறும், தாங்களே தொகுதிகளை பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒப்படைக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில்…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - செப்டம்பர் 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…
udhay

Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?

Posted by - ஜூன் 20, 2026 0
ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன