Tasmac shop holiday

Tasmac shop holiday : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு.! குடிமகன்களுக்கு அலர்ட்.! வெளியான முக்கிய அறிவிப்பு

151 0

Tasmac Shop Holiday : தமிழகத்தில் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

டாஸ்மாக்- மதுபான விற்பனை

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் மொத்த வசூலை ஒரே நாளில் வாரி சுருட்டி விடும். அந்த அளவிற்கு மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே மதுப்பழக்கத்தை குறைக்க பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு வார விடுமுறையோ, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விடுமுறை பண்டிகை நாட்களிலும் விடுமுறை விடப்படுவது இல்லை. அதே நேரம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள்,  திருவள்ளுவர் நாள்,மீலாது நபி நாள்சுதந்திர நாள் (ஆகஸ்ட் 15), மே தினம் (மே 1) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படும், மேலும் கோயில், மசூதி, தேவாலய திருவிழாக்கள் நேரத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிலாது நபி பண்டிகையையொட்டி நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,

மதுபான கடைகள், பார்களுக்கு விடுமுறை

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3-(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதே போல தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

Related Post

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - ஜூன் 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: 4 நாட்களில் 79 ஆசிரியர்கள் மயக்கம் ..

Posted by - டிசம்பர் 30, 2022 0
போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை: சம…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - மே 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

“சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தத் திட்டம்…” – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

Posted by - ஜூன் 11, 2023 0
பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை…
வி.எஸ். பாபு காலமானார் - கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவு

வி.எஸ். பாபு காலமானார்: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ மறைவு

Posted by - நவம்பர் 19, 2026 0
வி.எஸ். பாபு காலமானார் என்ற துயர செய்தி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த அவர், உடல்நலக்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன